வட்டம் (1)/நகுலன்


வாழ மனமில்லை
சாக இடமில்லை;

வானில் மேகமில்லை;
ஆனால்
வெய்யிலும் மடிக்கவில்லை;

கந்தைக் குடைத்துணியெனக்
கிடக்கும்
தன்னினமொன்றைச்
சுற்றிச் சுற்றி வருமிக்
கறுப்பின் ஓலம் போல்
து
செத்துக் கிடக்கும்
சுசீலாவை
வட்ட மிட்டு
வட்ட மிட்டு
வட்ட மிட்டு…

(கசடதபற இதழில் நவம்பர் 1970 ல் வெளிவந்தது)