சீவக சிந்தாமணி-நாமகள் இலம்பகம் –உஷாதீபன்

இரிந்ததேன் குவளையின் நெற்றி தைவர                                   

முரிந்துபோ தவிழ்ந் துகொங் குயிர்க்கு முல்லையின்                         

அரும்புசேர்ந்து அணிஞிமிறு ஆர்ப்ப வாய்பதம்                          

விருந்தெதிர் கோண்மெனத் தழுவி வீழ்ந்தவே

ஞிமிறு – தேனீ, வண்டு
நெற்றி – உச்சி வகிடு முரிந்து – கெட்டு
போதவிழ்ந்து – மலரும் பருவத்து அரும்பு
கொங்கு – தேன்
நுளைச்சியர்கள் சூடிக் கொண்டிருக்கும் மாலையில் தேன் சிதறப் பறந்து கொண்டிருக்கும் வண்டினங்கள் குவளை மலர் சேர்ந்த தேனோடும் கலந்து, முல்லை அரும்பு அவிழ வழியும் தேனொடு சேர்ந்து, விருந்துக்கு வாவென்று அழைப்பதுபோன்ற குதூகலத்தில் இன்னிசை எழுப்பிக் கூடி மகிழ்கின்றன என்பதுவே இப்பாடலின் பொருள் எனக் காண்க.
தேனுண்ணும் வண்டு, மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு….
பூங்கொடியே…நீ சொல்லுவாய்…..! –
இப்பாடல் நினைவுக்கு வருகிறதா?