வட்டம் (2)/நகுலன்

பேனாவுக்கு மையிட்டு
அதன் முனை தீட்டி
வெள்ளைக் காகிதத்தை
மேசை மீது விரித்து;
எழுத வருங்
கால்
பேனாவின் முனை
மூளையின் மண்டைக்
கனத்தில்
குடை சாயும்;
வெள்ளைக் காகிதத்தின்
வைரத் திண்மையில்
அதன்
கூர் மழுங்கும்;
சேலை அவிழ்க்
கலாமென்ற
லோ
சுசீலாவும் செத்துக்
கிடக்கின்றாள்