இராமானுஜ தோரணையில்
நடந்து போகும்
அவர் பெயர்
அருட்பிரகாசம்.
கணக்குக்கும் அவருக்கும்
பிணக்கு
ஆனால்
அவர்
கணக்கு வாத்தியார்.
ஒவ்வொரு நாளும்
கணக்கை
கட்டிப்பிடிக்க முயன்று
தோற்பார்
எட்டி நின்று
கைகொட்டி சிரிக்கும்
கணக்கு.
எல்லா கணக்கும்
மனக் கணக்கு என்பது
அவர்கட்சி.
மனனம் செய்ய செய்ய
பாவம்
மறந்து போகும்
அவருக்கு.
நகங்கடித்து நகங்கடித்து
கடினப் பிரயத்தப்பட்டு
அவர்
கணக்கை வரவழைக்கும்
அழகே அழகு.
வந்த
ஒரு கணக்கை முடிக்க
அவர் படும் பாடு
குட்டியிட
பெட்டைநாய்
படும்பாடு.
இராமானுஜ தோரணையில்
நடந்து போகும்
அவர் பெயர்
அருட்பிரகாசம்.
–
