பெருவிழா/ம.சக்திவேலாயுதம்

வீடுதோறும்
நவீனக் குடில்கள்…
வாசலெங்கும் மின்னும் நட்சத்திரங்கள்…
வீதியெங்கும்
கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்…
வாழ்த்து அட்டைகளின்
வண்ண மேடைகள்…
வாழ்த்து மொழிகளின்
எண்ணக் குவியல்கள்…
பரிசுப் பொருட்களின்
பந்தப்பரிமாற்றங்கள்…
கிறிஸ்துமஸ் மரங்களின்
கம்பீரங்கள்…
குளிர்காலத்தை நினைத்தும்…
வசந்தகாலத்தை வரவேற்றும்…
குடும்ப உறுப்பினர்களின் ஒன்றுகூடல்…
நல்லெண்ணங்களை
பகிர்ந்து கொள்ளல்…
புத்தாடைகளின் பளிச்சிடல்…
விருந்துகள் கேளிக்கைகள் என
மனதில் மகிழ்ச்சி பொங்கல்…
இவை கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்..
அன்பும் பண்பும்
எங்கும் தழைத்தோங்க
கிறிஸ்துவின் உன்னத வழிகள்
உன்னத வரிகள்
எங்கும் பரவித்திளைத்திட
உலகம் எடுக்கும் பெருவிழா…
கிறிஸ்துமஸ் திருவிழா…
வாழ்த்துகள்…வாழ்த்துங்கள்…