ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 38/

26.12.2021 –  ஞாயிறு  


ஆசிரியர் பக்கம்



மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி:  ஆறாம் தேதி புத்தகக் கண்காட்சி.

அழகியசிங்கர் : ஆமாம்.

ஜெகன் :  உங்கள் குரல் உற்சாகமில்லாமலிருக்கிறதே ஏன்?

மோகினி :   அவநம்பிக்கையோடு இருப்பதற்குக் காரணம் என்ன.

அழகியசிங்கர் : சற்று அவநம்பிக்கையோடுதான் இருக்கிறேன்.  புத்தகத்திற்காக அதிகமாகச் செலவு செய்யப் போவதில்லை. விருட்சம் வெளியீடாக  புதிய புத்தகங்கள் குறைவாகவே வருகின்றன.

மோகினி :  கொரானா பயமா?

அழகியசிங்கர் : அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஜெகன் :  ஒரு புத்தகத்தை எப்படிப் படிக்கிறீர்கள் நீங்கள்.

அழகியசிங்கர்:  முதலில் நான் எந்தப் புத்தகத்தையும் படிப்பதில்லை.

ஜெகன் : என்ன சொல்கிறீர்?

அழகியசிங்கர் : என்னிடம் ஏகப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன.  எதையாவது எடுத்துப் படித்ôல் என் பொழுது எளிதாகப் போய்விடும்.

மோகினி :நீங்கள் அப்படிப் படிப்பதாகத் தெரியவில்லை.

ஜெகன் :  புத்தகம் படிப்பதற்கு உங்களுக்கு மலைப்பாக இருக்கிறதா?

மோகினி :  உங்களைச் சுற்றிலும் புத்தகங்கள் மலைபோல் குவிந்திருந்தால் சற்று அச்சமாகத்தான் இருக்கும்.

அழகியசிங்கர் :சின்ன வயதிலிருந்து எனக்குப் புத்தகங்கள் மீது ஒரு காதல் உண்டு.  அந்தக் காதல் வெறியாக மாறி பார்க்கிற புத்தகங்கள் எல்லாம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.  நான் இப்போது புத்தகம் சேகரிப்பதை வெறுக்கிறேன்.

ஜெகன் : ஒரு குடிகாரன் குடியை மறக்க முடியாது.  ஒரு சிகரெட் பிடிப்பவன் சிகரெட் பிடித்துக்கொண்டுதான் இருப்பான்.  நீங்களும் அப்படித்தான்.

அழகியசிங்கர் : புத்தகத்தைச் சேர்த்துக் கொண்டே இருப்பவன்.

மோகினி :   கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

அழகியசிங்கர் :  மாற்றிக்கொள்கிறேன்.

மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.

அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.

ஜெகன்: இன்று பேசியது போதும்.

அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.

(எழுதியது இரவு 09.55)