
ஆதியில் ஒரே ஒரு
பெண்தான் இருந்தாள்
அனைவரிடமும் அன்புகாட்டினாள்
அரவணைத்தாள்
எல்லார்க்கும் தலைமை தாங்கி
எல்லாமும் கொடுத்து
அவள் தன்
சந்ததியைப் பெருக்கினாள்
உணவு தேடினாள்
பங்கிட்டாள் பகையழித்தாள்
அவள் அறிவுக்கண்
தகித்தெடுத்தது
தாங்கமுடியவில்லை
அவளைக் கைதியாக்கினர்
விலங்கிட்டு
உள்ளே தள்ளிப் பூட்டினர்
வெளியே
அவளை நினைத்துப்
புகழ் பாட மட்டும்
எப்போதும் மறக்கவில்லை

அருமையான சிந்தனைக்குரிய கருத்துக்கள்.
நன்றி