
காய்கறி விற்கிற மணியின்
முகந்தான் சாந்தம்
காய் நிறுக்கும் தராசுத் தட்டின்
அடியில் காந்தம் !!
பால்கார சோமுவின் சிரிப்பு
எப்போதும் வெண்மை
பாக்கெட்டுகள் மட்டும் தான்
ஓட்டை இது உண்மை !!
பூக்கார அம்மாவுக்கு
வாய் நிச்சயம் பெரிசு
பூ அளந்து முழம் போடும்
கை மட்டும் சிறிசு !!
ஒழுகும் பைப்பை இதோவென
ஒரு நொடியில் சரி செய்யும்
பிளம்பர் காளி வந்துசென்றால்
என் பர்சில் விழும் ஓட்டை !!
எரியாத பல்பை மாற்றச் சொன்னால்
எல்லாவற்றையும் மாற்றிவிடும்
எலக்ட்ரிஷிியன் முரளியைத் தான்
என்னால் மாற்ற முடியவில்லை !!
ஒப்பாரி வைத்தே பிழைப்போட்டும்
ஆட்டோ சேகர் சற்று வினோதம்
எப்போது சிரிப்பான் முறைப்பான்
என்பது அவனுக்கே தெரியாது…!!

Yes you are right
Good observation
அருமை அனைத்தும் உண்மை
👌👌👌👌❤️
👌👌👏🏻😀
காய்கறி காரனில் ஆரம்பித்து ஆட்டோவில் முடித்தது சிறப்பு
அனைத்து வாக்கியங்களுக்கும் கடைசி வார்த்தைதான் உயிரூட்டி உண்மையைக் காட்டி நிற்கிறது.
எனது கவிதை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி🙏💕
கருத்தும் பாராட்டும் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி