என்பா/அழகியசிங்கர்

என்பா 69

நேற்று அடித்த பெருமழையில்
கூப்பிடாமல்
வந்து நிரம்பிய
சாக்கடையும் மழை
நீரும் போகச் சிலகாலம்
எடுக்கும்.
பக்கத்து வீட்டார் படும் அவதி

என்பா 70

சேர்த்து வைத்த
புத்தகங்கள் பல்லாயிரம்.
படிக்க வேண்டாம் பார்த்தால்
போதும் என்றாலோ
புத்தகங்களுக்கு றெக்கை முளைத்துப்
பறக்கத் தொடங்கின தானாக.