
அட்டை வாழ்த்துகள்
சில வாசகமாய் வசீகரிக்கும்.
சில படமாய் காட்சி விரிக்கும்.
சில தருவோனின்
ரசனை சொல்லும்.
சில பெறுவோனின்
ரசனை காட்டும்.
ஆனாலும்
வாசகமும் படமும்
ரசனையையும் தாண்டி
அந்த நாளின் மகத்துவத்தையும்
அடுத்து வரும் ஆண்டின்
வள முக்கியத்துவத்தையும்
மற்றவரின் வாழ்விருப்பில்
கொண்டிருப்பதாய்த்தான் அமையும்–
எல்லா வாழ்த்தின்
அடிப்படைக் குறிப்பும்.
இன்று நான் கூறும்
இனிய புத்தாண்டு 2022ன்
இந்த வாழ்த்தைப்போல. !
