
ஒவ்வொரு
நிமிடமும் கொண்டாட்டம்தான்
ஓஷோ சொன்னார்
இன்னும்
ஞாபகம் இருக்கிறது
நமக்குப் பிடித்து
ஒரு கதையோ ஒரு கவிதையோ
எழுதிவிட்டால்
கொண்டாட்டம்தான்
படிக்கக் கிடைக்கும்
புத்தகம் சிறப்பாக
இருந்து விட்டால்
கொண்டாட்டம்தான்
இன்னும் கூட
க.நா.சு கவிதைகளைப்
படிப்பது என்னமோ
கொண்டாட்டம்தான்
எதிர் வீட்டுச் சின்ன
பெண்கள்
டூ வீலரை உதைத்துக்
கிளப்புவதைப்
பார்ப்பது கொண்டாட்டம்
\
இன்னும்
எத்தனையோ
கொண்டாட்டங்கள்
தினம் தினம்
நம்
வாழ்வில் உண்டு
ஆனால்
கொண்டாடத்தை
உடனே உடனே
மறந்து விடுவதும்
கொண்டாட்டம்தான்

கடைசி வரிகள்…கொண்டாட்டத்தை எப்போதுமே புதுப்பிக்கும் கருத்தைக் கொண்ட வரிகள். அருமை. எளிமை.