
கொண்டையுள்ள தோகைமயில்
குளிர்மேகம் கண்டாடும்!
தண்டையுள்ள பதம் இரண்டும்
தாள ஜதிப் பண்ணாடும்!
பள்ளிசெல்லும் மாணவர்க்கு
விடுமுறைகள் உல்லாசம்!
அள்ளிக் கொண்டை முடிப்பவர்க்கு
அடர்ந்த கூந்தல் சந்தோஷம்!
கூழுக்கலையும் ஏழ்மை இங்கே
தேர்தல் வந்தால் கூத்தாடும்!
பாழும் பஞ்சை மனங்களெல்லாம்
பணத்தைக் கண்டால் பூத்தாடும்!
மொறுமொறுன்னு பஜ்ஜி, வடைகள்
மழைக்காலத்தில் வாயூறும்!
நறுக்கும் மாங்காய் பத்தை, காரம்
ருசிச்ச நாக்குல நீர் ஊறும்!
விருது, பட்டம் கிடைக்கும்போது
எழுத்தாளர்க்கு ஆனந்தம்!
‘விருட்சம்’ போட்ட நூல்களெல்லாம்
விற்றுத் தீர்ந்தால் ஆச்சரியம்!
கொண்டாட்டமாம் கொண்டாட்டம்!
எல்லாம் இங்கே கொண்டாட்டம்!
