கொண்டாட்டம்/நாகேந்திர பாரதி



குப்பாந்து புரண்ட
ஆட்டம் தொடங்கி

மல்லாந்து நகரும்
ஆட்டம் வரைக்கும்

கோலியாட்டம் கபடியாட்டம்
கோலாட்டம் கோல ஆட்டம்

பள்ளியாட்டம் பருவ ஆட்டம்
காதல் ஆட்டம் கல்யாண ஆட்டம்

பதவி ஆட்டம் பணத்தின் ஆட்டம்
பாச ஆட்டம் படுக்கை ஆட்டம்

ஆட்டம் எல்லாம் ஓய்ந்த பின்னே
அடுத்த தலைமுறை ஆட்டம் ஆரம்பம்