கவிஞர்கள் யாம்..!

வே.கல்யாணகுமார்.
பெங்களூரூ.

கவிஞன் என்பவன்
உலகை ஆள்பவன்!
வறுமை வந்த போதும்
வாழ்வில் பெருமை கொண்டவன்! தன் வாழ்வை மறந்து உலகு வாழ பாடல் புனைபவன்!
கவிஞன் என்பவன்
உலகை ஆள்பவன் கவி உலகை ஆள்பவன்!

புத்தகமாய் விரிந்த மனம் அவனுக்கு உண்டு
சத்தியமே அவனுடனே இருப்பதும் உண்டு..

கலைமகளின் ஆசியவன் கவிதைக்கு உண்டு! உலக கவலைகளை புறம் தள்ளும் ஞானமும் உண்டு.! பித்தனைப்போல் சுத்தி சுத்தி வந்த போதிலும்.. இத்தரையை வெல்லும் கவிதை அவனுக்குள் உண்டு!

கவிஞன் என்பவன் உலகை ஆள்பவன் கவி உலகை ஆள்பவன்!

தேடுகின்ற விடைகளுக்கு தீர்வு காண்பவன்..
தேடித்தினம் சோறு தின்னும் வாழ்வை வெறுப்பவன்!
கிழிந்த உடை அணிந்த போதும் மென்மை யானவன்! கேடுயில்லா மனதினாலே உண்மை யானவன்!

கவிஞன் என்பவன் உலகை ஆள்பவன் கவி உலகை ஆள்பவன்!

எவ்வுயிரும் தம்முயிராய் எண்ணி வாழ்பவன்! ஏய்த்துப் பிழைக்கத் தெரியாத ஜீவனானவன்
தன்பிள்ளை தன் பெண்டு தனக்கென வாழா.. தகைமையாலே இறைவனுக்கு நெருக்கமானவன்..

கவிஞன் என்பவன் உலகை ஆள்பவன் கவி உலகை ஆள்பவன்!