மூவர் / ஜான்னவி

கவலை விட்டது என்று நிம்மதியாக இருக்கிறார்
தாரை வார்த்துக் கொடுத்து விட்டு அப்பா.

பாதி வழியில்
கை விட்டு விட்டான்
கைப்பிடித்த கணவன்.

நம்பியிருந்த பிள்ளையோவெனில்
விட்டு விட்டான் இலவச
முதியோரில்லத்தில்.

தந்தை, கணவன், மகன்
இவர்களேபெண்ணின் பாதுகாவலர்கள்
என்று அறிவுறுத்தியிருக்கிறார்
மதிப்பிற்குரிய
மனு அவர்கள்.

           🦋    🦋   🦋

6 Comments on “மூவர் / ஜான்னவி”

    1. மிக்க நன்றி.
      விடுதலை என்பது இந்தக் காலத்திலு ம். பல பெண்களுக்கு நீர்க் குமிழி யாகத்தான் இருக்கிறது.
      Thanks for your comment.
      Such comments are encouraging!
      Happy Pongal!

  1. இன்னும் எத்தனை காலம் பொயுரைத்து
    பெண்ணடிமைதனம் தொடரருமோ!
    அறைந்தது செவிபறையில் இந்த கவிதை;

    1. மிக்க நன்றி. இந்தக் கவிதை உருப்பெற இந்த
      முன்னேற்ற(!) காலத்திலும்
      பெண்ணை மிதியடியாக நினைக்கிற, நடத்துகிற,
      ஆணாதிக்க வாதிகள் தான்
      காரணம்.

      Thanks. Happy Pongal!

Comments are closed.