செய்திகள் பலவிதம் /அழகியசிங்கர்

புதுடில்லி , டிச. 16′

பைபோலார்’ குறைபாடு என்ற மன நோயால் பாதிக்கப்பட்ட நபர், டில்லியில் மாவட்ட நீதிபதியாக பணியில் தொடர தடை ஏதும் இல்லை ‘ என,உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. டில்லியை சேர்ந்த பவ்யா நயின், 36, என்ப வர், தன் 25வது வயதில், ‘பைபோலார்’ குறைபாடு என்ற மன நோயால்பாதிக்கப்பட்டார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் உற்சாகமான மனநிலையுடனும், சில நேரங்களில் கடும் மன சோர்வுடனும் காணப்படுவர். இவர்களது மன நிலை அடிக்கடி மாற்றத்துக்கு உள்ளாவதே இந்த நோயின் தன்மையாக கூறப்படுகிறது.


உலகளவில் மாற்றுத் திறனாளிகள் உருவாவதற்கு ஆறாவது முக்கிய காரணியாக இந்த குறைபாடு உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில், டில்லி நீதித்துறை பணிகளுக்கான தேர்வு எழுதிய பவ்யா நயின், 2018ல் தேர்ச்சி அடைந்தார். இவரது மனநோயை காரணம் காட்டி, ‘நீதித் துறையில் பணியாற்ற இவர் தகுதியற்றவர்’ என,டில்லி உயர் நீதிமன்றம் 2019ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பவ்யா நயின் மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதி மன்றம், மருத்துவ ரீதியாக இவரது தகுதியை ஆய்வு செய்ய மருத்துவ குழுவை கடந்த மாதம் அமைத்தது.

இந்த மருத்துவ குழு வினர் அளித்த பரிந்துரை யின் அடிப்படையில், ‘டில்லி மாவட்ட நீதிபதியாக பவ்யா நயின் பணியை தொடர தடை ஏதும் இல்லை ‘ என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தர விட்டது.