வெந்தனல் காடு/வசந்ததீபன்


மயிரிழையில்
அறுந்து போகிறது
மெல்லிய மவுனத்தில்
உன் தீராத அன்பு
கனவுகள் பீறிடும் மனசு
அலைகள் உள்ளாடும் கடல்
எக்காலத்தும்
உறங்குவதில்லை
இம்மை எரிகடல்
மறுமை இருட்கடல்
இன்மையில் போகிறது
என் துடுப்பற்ற படகு
என் நெருப்பை எந்த அடுப்பில் வைப்பேன்?
என் தாகத்தை எந்த நதியில் தீர்ப்பேன்?
என் தனிமையை எவ்விடத்தில் தொலைப்பேன்?
பாதையின் போக்கு அறிவேன்
அதன் சூட்சுமம் புரியவில்லை
பயணம் போனால் யாவும் புலப்படும்
மனதுள் மட்டும் உலவும் அன்பு
சப்தம் உள்ளொடுங்கிப் போகும்
கிணற்றில் போட்ட கல்
செடியை வானவில்லில் நட்டாள்
பூக்கள் பூக்குமென்று காத்திருந்தாள்
நட்சத்திரங்களும் நிலாக்களும் பூத்தன.

🦀

🦀