உரு அறியாப் பிளை அழ…..

கம்பனின் இராமகாதையில் வரும் அவலச் சுவை மிகுந்த பாடல் இது. இராமன் கானகம் ஏகுகிறான் என்ற செய்தியைக் கேட்ட அனைவரும் கலங்கி அழுகின்றனர். மக்கள் மட்டுமின்றி ஆறறிவில்லாத கிளிகளும், நாகணவாய் பறவையும் பூனையும் அழுதன என்னும் கம்பன் மேலும் ஒருபடி மேலே சென்று கருவில் இருக்கும் உருவறியாப் பிள்ளைகளும் அழுதன என்றால் இராமனின் அருமை தெரிந்த பெரியோரை பற்றி என்ன சொல்வது என முடிக்கின்றான்.
”கிள்ளையொடு பூவை
அழுத; கிளர் மாடத்து –
உள் உறையும் பூசை
அழுத; உரு அறியாப்
பிள்ளை அழுத;
பெரியோரை என் சொல்ல? –
‘வள்ளல் வனம் புகுவான் ’
என்று, உரைத்த மாற்றத்தால்”.
[
