மழை

உமா பாலு

வானத்திற்கு வந்தது பூமியின் மேல்காதல்
மேகத்தை அழைத்தது தூது செல்ல
சிலிர்த்தது பூமி மழைக்கரம் தீண்ட
புள்ளினம் புல்லினம் யாவும் உயிர்த்தன
எல்லாம் இன்ப மயம்.