இரா. முருகன்
தொலைபேசி ஒலிக்க,
’ஒரு கவிதை எழுதினேன், கேளுங்க
எட்டு வரிக் கவிதை
என் சந்திரஹாசன் அண்ணா பற்றி
என் அப்பா பற்றி, என்னைப் பற்றி
என் எண்ணங்கள் பற்றி
இரண்டு நிமிடத்தில்
எல்லா உணர்ச்சியும் பொங்கிவர
கலைத்துப் போட்ட பிம்பங்களாக
குரலில் உருமாறும் கவிதை.
சரி சார், பார்க்கலாம்
விடைபெற்றோம்
