
ஒரு கவிதையில் புனைந்து விடலாம்தான்.
ஒரு கடிதத்தில் எழுதி
விடலாம்தான்.
ஒரு சித்திரத்தில் தீட்டி
விடலாம்தான்.
ஒரு சிலைக்குள் செதுக்கி
விடலாம்தான்.
ஒரு கானத்தில் பொதித்து
விடலாம்தான்.
ஒரு காட்சிக்குள் வனைந்து
விடலாம்தான்.
ஒரு இசைக்கோர்வைக்குள் இழைத்து
விடலாம்தான்.
கவிதையோ கடிதமோ
சித்திரமோ சிலையோ
கானமோ இசைக்கோர்வையோ
அவையாவும் நீயெனும்
கலவையில் இணைந்திடும்போது
அதன் மொத்த மகத்துவமும்
சற்றேனும் நீர்த்துவிடுகிறது
நீ ஒற்றைநிற வானவில்லாய்
உன்னை உருமாற்றிக்கொள்கிறபோது.
