
நான் சாதாரணமானவன்/அனங்கன்.
சிறுகுருவி கூட்டின் முன்னால்..
நானொன்றும்
இமயம் அல்ல.
பானை புனைவதின் நளினம்..
.பாப்புனைவதுபோல் எளிமைஅல்ல.

உழுபவன் உழைப்பின் முன்னால் உலகமேஒன்றும்
அல்ல…
உணர்ந்திட வேண்டுமென்றால் வயலில்
இறங்கிடு வளத்தினை அள்ள.
தானென்ற எண்ணமிருந்தால்
உன்உலகம் இருண்டிடும் மெல்ல…
எளிமையைப் பண்பாய்க்கொண்டால்
உன்ஒருசொல்போதும் உலகினை வெல்ல.
