நன்றி/புஷ்பால ஜெயக்குமார்

எனக்கான
சிறிய உலகத்தை
காற்றின் குமிழ் போல்
மெல்ல வடிவமைக்கிறேன் நான்
இறந்தவர்கள் பாடிய
செங்குத்தான பாடலின்
உள்ளீடுகளிலிருந்து
கசிந்து வந்த அது
காலம் காலமாய்
அதிர்ந்து திரும்புகிறது
எனது ஞாபகத்தில்
இல்லாததைத் தேடுகிறேன்
இரவில் வழிப்போக்கனின் பார்வையில்
வானத்தில் சரிந்து விழும்
நட்சத்திரத்தைப் பார்க்கிறேன்
இறப்பதற்கு முன்
இறந்தவன் போல்
இருக்கும் ஒத்திகை ஒன்று
என்னை எழுப்புகிறது
நான் சொல்வதை
நீ சொல்கிறாய்
மிக்க நன்றி