
அவர்களுக்காக நானும்
எனக்காக அவர்களுமாக
இருந்த தருணத்தில்
என்னைச் சுற்றி எழுப்பப்பட்டது
ஒரு பிம்பம்
பிம்பச் சிறை கைதிகளாக அவர்கள்
பிம்பம் கொடுத்த போதையில் நான்
இன்று
பிம்பச் சிறையிலிருந்து
விடுதலையான அவர்கள்.
இறந்த
பிறகும்அவர்களுக்காக
விரித்த வலையில்
சுயம் இழந்து
விடுதலை இன்றி
சிக்குண்டு
பிம்பமாய்
நான்

விதையில் விருட்சமும்
விருட்சத்தில் விதையும்
இயல்பானதே…ஆயினும்
எவ்வளவு நிழலும்
கனியும் விளைந்ததென்பது
தனித்தனி சாதனையே
வேதனையல்ல
விடுதலை தேட