
முள்ளை மலராக்கு
இதயத்துள் பத்திரப்படுத்து
கமழட்டும்
நறுமணம் வாழ்வெங்கும்…
குங்கிலியக் காட்டில்
கமழ்கிறது
வனத்தின் ஆன்மா
இடையறாது
மண்புழுவைத் தேடிக்
காணவில்லை என
வருத்தப்படுகிறதேன் நீ !
மீன் குழம்பை நினைத்தா ?
விடுதலையுள் அன்பு
அன்பினுள் வாழ்வு
வாழ்வினுள் மனிதம்
மனிதத்துள் ஆனந்தம்
காயம்பட்டுக் கிடப்பவனை
சுயப்படம் எடுக்கிறார்கள்
தற்கொலை செய்தவர்களின் முகங்களை
பார்க்கத் துடிக்கிறார்கள்
சக மனிதனோடு பேசிப்பழக அஞ்சுகிறார்கள்
நிறம் மாறும் மனசு
நித்தம் ஆடும் சடுகுடு
நாணம் ஊறும் செவ்வானம்
கவலை தோய்ந்த முகங்கள் ஆயிரம்
கன்றி போய் கிடக்கிற
மனசுகள் பல்லாயிரம்
கொதிக்கும் எண்ணெய்யில் கடுகுகளாய்
மனிதர்கள் வெடிக்கின்றனர்.
🦀
