இரண்டு செய்திகள்/வாசு தேவன்

இரண்டு செய்திகள் இங்கு பரவலாக கவனம் பெறவில்லை. (1) கோபாலகிருஷ்ணன் பத்பநாபன் என்ற திலீப் மலையாள நடிகர் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு நடிகையை கடத்தி பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட நடிகை நேற்று வரைக்கும் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. அந்தளவுக்கு அரசியல் / அதிகார நெருக்கடிகள் அதிகம். நேற்று நடிகை பாவனா பகிங்கரமாக தான் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதற்கு கேரள நடிகர்கள் / நடிகைகள் அனைவரும் பாவனாக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.(மம்முட்டி, லால் சேட்டன் உட்பட). கூடுதலாக திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியாரும் பாவனாவுடன் நிற்கிறார். இதெல்லாம் தமிழில் பார்க்கவேமுடியாது. நடிகையாக இருந்தாலும் சாதாரண பெண்ணாக இருந்தாலும் அவல‌ நிலைமை இதுதான். சுசிகணேசன், வைரமுத்து போன்றவர்கள் இன்றும் துணிச்சலாக உலாவருகிறார்கள்.

கேரள மக்களை மதிப்பதற்கு பல காரணங்களில் இதுவும் ஒன்று. பெண்களின் அவலமும் துயரமும் இப்படி இருக்கிறது ஒரு புறம், மறுபுறத்தில் (2) காஃபி டே சித்தார்த் பெரும் கடன் தொல்லையில் தன்னை மாய்த்துக் கொண்டார். 8000 கோடி கடன். அவர் மனைவி மாளவிகா தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.இரண்டு வருடத்தில் கடனை 2000 கோடிக்கு கொண்டுவந்தது அசுர சாதனை. கணவனை இழந்து நிர்வாகத்தை சவாலாக முன்னெடுத்து சென்றது Remarkable Achievement! நிர்வகிக்க தெரியாமல் கடன் தொல்லையில் இதே கர்நாடாகவில் பிறந்து லண்டனில் ஒளிந்து மறைந்து வாழும் மல்லையா, மற்றொரு மோசடி பேர்வழி குஜராத் நீரவ் மோடி போன்றவர்கள் வாழ்கிற காலத்தில்தான் மாளவிகாவும் ஓடி ஒளியாமல் ஒரு நிறுவனத்தை முன்னெடுத்து செல்கிறார். (சில விதிவிலக்குகளும் உண்டு. ICICI Former CEO Chanda Kochhar ). பெண்கள் மேல் இழைக்கப்படும் பாலியியல் குற்றங்களும் அதிகம். அவர்களின் சாதனைகளும் அதிகம். அம்மனாகவும் பார்க்கும் சமூகம். அம்மணமாகவும் பார்க்க விழையும் சமூகம். விசித்திரமான‌ நாடு இது.

One Comment on “இரண்டு செய்திகள்/வாசு தேவன்”

  1. பாலியல் தொந்தரவு எப்படி இவ்வளவு அதிகமான முறை, எல்லாம் ஷோஷியல் மீடியா காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

Comments are closed.