
எந்த தடுப்பூசியும் நூறுசத வீதம் பாதுகாப்பு என சொல்லமுடியாது. ஆனால் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் மானுட குலத்தை காப்பாற்றி உள்ளது.
கொரானா வைரஸ் இன்னும் புரியாத புதிர்தான். ஆனால் தடுப்பூசி இல்லையெனில் சாவு எண்ணிக்கை பல மடங்கு இருந்திருக்கும். எட்வர்ட் ஜென்னர் தான் தடுப்பூசி தந்தை என அழைக்கப்படுகிறவர்.
இங்கிலாந்தில் சின்ன அம்மைக்கு 1796 ம் ஆண்டில் தடுப்பூசியை கண்டுபிடித்தார். தடுப்பூசியை எடுத்துக்கொண்டதால் சின்ன அம்மையினால் மரணங்கள் எந்தளவுக்கு குறைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.(புகைப்படத்தை பார்க்கவும்). இதற்குப்பிறகு 19ம் நூற்றாண்டில் லூயி பாஸ்டியர் ராபிஸ், காலராவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தார். கடந்த 100 ஆண்டுகளில் பல தடுப்பூசிகளே மானுட குலத்தை காப்பாற்றி வருகின்றன. இருமல்(1914), டிப்தீரியா(1926), டெட்டனஸ்(1938), இன்ஃபுலைன்ஸா(1945),மம்ஸ்(1948), போலியா(1955), மீசல்ஸ்(1963),ருபெல்லா(1969) இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1980 ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் உலகிலிருந்து சின்ன அம்மை முற்றிலும் அழிக்கப்பட்டது என அறிவித்தது. தடுப்பூசியால்தான் இது சாத்தியமாயிற்று. பிற நோய்கள் இன்னும் இருக்கின்றன. உலகில் இன்னும் 30 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. ஆக இந்த தடுப்பூசிகள் இல்லையென்றால் என்னவாயிருக்கும்? கொரானாவுக்கு எதிராக முழுவீச்சில் தடுப்பூசி எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற விஷமப்பிராச்சாரம் படு பிற்போக்கானது. தெரிந்தே மக்களை மரணத்திற்கு தள்ளுவது அறமற்ற செயல். தடுப்பூசி என்பது தனிநபர் உரிமை, எடுத்துக்கொண்டாலும் என்ன உத்திரவாதம்? போன்ற கதைக்கு உதவாத வாதங்கள் கேட்டு அலுத்து விட்டது. நம்மை விட பாரம்பரிய மருத்துவமுறைகள் பிரேசில் அமேசான், சைனா, ஜப்பானிலும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் தடுப்பூசி தேவையில்லை, இஞ்சி கஷாயம், மிளகு ரசம் போதும் போன்ற குரல்கள் எழவில்லை. இங்குமட்டும்தான் அறிவியலுக்கு எதிரான போக்கு நிலவுகிறது. (மருந்து கம்பெனிகளின் கொள்ளை லாபம் என்பது பிறிதொரு விவாதம். அதை இத்தோடு இப்போதைக்கு இணைக்க வேண்டாம்).

முகநூலில் வரும் விஷயங்களை இங்கே மறுபதிப்பு செய்யவேண்டாம் நண்பரே! எங்களுக்கு நேரம் மிக முக்கியமானது.
ஓர் இலக்கிய இதழில் இப்பதிவு தடுப்பூசி வேப்டாமே. ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டுகிறேன்