
ஞானஔி ஏற்றவந்த வீரத்துறவி பிறந்தாரே!
மானமுடன் வாழும்நிலை தோன்றிவர வந்தாரே!
பாரதமே.. தலைநிமிர பண்புநலன் தந்தாரே..
பணிவுடனே துணிவுமிகு
பாதையவரத் தந்தாரே..!
காளியவள் சூலமென குருவின் முன் நின்றாரே
இராமகிருஷ் ணர் சீடரென தலைநிமிர்ந்து நின்றாரே!
கடல்கடந்து நிலம் கடந்து
மனம் கடந்த துறவியாய்
இளைஞரகளை எழுப்புகிற காலையிளம் கதிராக..
ஞாலமதில் வீரமுடன் துறவுநிலை கொண்டாரே!
வெற்றியெனும் கொடியேந்தி.. விடியலினைத் தந்தாரே!
