
காலங்கள் இனிமை பூக்கட்டும்
இன்றும் என்றும்
இன்பமே உடன் வரட்டும்
அவளை மனுசியாய் நினைக்கவில்லை
அவளை பெண்ணாய் நடத்தவில்லை
அவள் அவனை ஆணாய் அல்ல
சவமாய் மதிக்கிறாள்
இவனை அவன் காலை வாரினான்
அவனை இன்னொருவன் வீழ்த்தினான்
எவனுக்கும் இல்லை
வெற்றி நிரந்தரமாய்
மழை வருகிறது
வெயில் வருகிறது
பிறப்பு வருகிறது
மரணமும் வருகிறது.
அலைகடலில் சிறுபடகு
அல்லாடும் பெருங்கனவு
அகப்படுமா?
தொலைவான புது வாழ்வு
வாதைகள் நீங்கட்டும்
சாதனைகள் நிகழட்டும்
சண்டமாருதமே எழட்டும்
சிறுமி சீட்டியடிக்கிறாள்
சிட்டுக்குருவி கீச்கீச்சென்கிறது
களிப்புப் பாடல் ஒலிக்கிறது
நதியில் பூக்கள் மிதக்கின்றன
சந்தங்களை நீரலைகள் இசைக்கின்றன
சந்தோஷங்களைப் பாடியபடி
நதி பயணிக்கிறது.
பழச்சாற்றில் ஊறிய ரொட்டித்துண்டுகள்
பட்டினியோடு கனவுகள் திரிகின்றன
பூக்களின் நெடி மவுனத்தில் படர்கிறது
தனியாக நடந்து வருகிறாள்
வெறி நாய்கள் அவளை மறித்துக் கடிக்கின்றன
காமிரா ஒன்று படம் வரைகிறது.
🦀
