
அழகான இனிய கவிதை
இதழ்களால்எழுதப்படுகிறது
இதயங்களால் வாசிக்கப்படுகிறது
கனி கனிந்திருக்கிறது
அணில் மரமேறப் பார்க்கிறது
பறவை கனியைச் சுற்றி வட்டமிடுகிறது
சூரியன் உக்கிரமாக எரிகிறான்
மொட்டைக் கரட்டில்
உடல் வேக ஊறுகிறேன்
பசிக்கு சோத்துக்கத்தாளையாவது தேடிப்பாக்கணும்
போடும் போது வாய் திறக்கிறது
எடுக்கும் போது வாய் மூடிக் கொள்கிறது
கொள்ளுக்கு சப்புக்கொட்டும் குதிரையானது
காப்பிக் கோப்பை காலியாயிருக்கிறது
சிற்றெரும்பு அதில் சுற்றித் திரிகிறது
எதுவும் அகப்பட்டதாக தெரியவில்லை
ஒரு வார்த்தை போதும்
குழந்தையை ஆளுகை செய்வதற்கு
வாயை மூடு
ஓடம் போகுது
நீர் விலகுது
பயணம் முடிவதை அறிந்தவரில்லை
தீப் போல சுடும்
வாளாக குத்திக் கீறும்
ஒரு வார்த்தை வெல்லும்
ஒரு வார்த்தை கொல்லும்
🦀
