
முற்றிலும் மெல்லின எழுத்துகளால் அமைந்தது கீழே குறிப்பிட்டுள்ள கவி
காளமேகத்தின் பாடல்..
மானமே நண்ணா மனமென் மனமென்றும
மானமான் மன்னா நனிநாணும் – மீனமா
மானா மினன்மின்னிமுன் முன்னே நண்ணினு
மானா மனிமேனி மான்
மானமே நன்னா மனம் என்- மானம் உடைய தமையினையே விரும்பாத மனத்தின் இயல்புதான் என்னே!
ஆனா மணி மேன் மான் – ஒப்பற்ற செம்மணி போன்ற திருமேனியை உடையாளான மான் போன்ற ஒரு நங்கை
ஆனா மினல் மின்னி முன் முன்னே நண்ணினும்- தன் அணிகளால் நீங்காத
முன்னொளியினை பரப்பிக் கொண்டு முன்னாக வந்தாலும்
என் மனமென்னும் மானமான் – என் மனம் என்று சொல்லப்படுகின்ற பெரிய யானையானது மன்னா நனி நானும் ஈனமாம் – மிகவும் வெட்கப்படும்…அவட்குத் தாழ்ந்தும் இழிவுற்று நீங்கும் ஆணின் உள்ளத்து எத்துணைத் தற்பெருமை இருப்பினும்,அது ஒரு பெண் முன்னே
வரக் கண்டதுமே குன்றிப்போய் வெட்கித் தாழ்வுற்று விடும் தன்மையுடையதாகி
விடுகிறது என்பது கருத்து.-
(சொற்களைப் பகுத்து பொருள் காணும் வகையினை அறிந்து பாடலை ரசிக்கலாம்)
