
🦚
வானில் பறந்து சென்று
வட்டமிடும பறவைபோல்
வலியுடன் பறந்து திரிந்தேன்
பூமிக்கு வரும் வழி தெரியாமல்
மேகத்தில் புகுந்து மிதந்து வழி
ஏதும் கிடைக்குமா?
பயந்து தேடினேன்
மேகத்தில் காற்று மோதி
இடியுடன் மழை
மண்ணில் பொழிந்தது
மழைநீர் மண்ணில் விழ
வானில் வழி கிடைக்கிறது
எனக்கு வழி கிடைக்குமா?
யோசிக்கும்போது படபடவென்று கதவு
தட்டும் சப்தம் கேட்டது
கனவும் கலைந்தது
வழியும் கிடைத்தது
பூமிக்கு வந்து சேர்ந்தேன்!
