அலைக்கழிப்புகளின் காலம்/ அதங்கோடு அனிஷ் குமார்

அவசரங்களின்
பல் சக்கரங்களில் சிக்கி
அன்றாட ங்களைத்
தொலைக்கிறோம்.

இளைப்பாறுதல் களுக்கான
குளிர் தருக்கள்
அருகிக்கொண்டே
வருகின்றன.

யாரும் யார்
முகத்தையும்
பார்க்க முடியாதபடி
கைபேசி திரைகளில்
விரல்களை ஓட விட்டு
காலம் கடத்து கிறோம்.

அலைக்கழிப்புகளின்
காலத்தின்
மௌன சாட்சிகளாய்
இருப்பதில்
எவ்வித புகாரும்
நம்மிடம் இல்லை.

நேற்று போலவே
இன்றும்
தடய மற்று
கடந்து போகிறது.
நாளையும்
அப்படித்தான்.

அலைக்கழிப்புகளின்
அந்தியில் நின்று
திரும்பிப் பார்க்கையில்
காலம்
நம்
முதுமையின் முகவரியை
வாசித்துக் காட்டி
நமுட்டு சிரிப்பு
சிரித்துப் போகும்.