நகுலனின் நூற்றாண்டு சிறப்பு மலர்/அழகியசிங்கர்



ஆறு மாதங்களுக்கு முன் நகுலனின் சிறப்பிதழ் கொண்டு வர வேண்டுமென்று விரும்பினேன். அவ்வளவு சுலபமாக அது இருக்கவில்லை. ஏனென்றால் பலரும் நகுலனின் சிறப்பிதழ் கொண்டு வந்தவண்ணம் இருந்தனர். நான் கேட்டபோது யாரும் அவ்வளவு சுலபமாக எழுதித் தரத் தயாராய் இல்லை. நீல பத்மநாபனின் நகுலம் என்ற நீண்ட கவிதைப் புத்தகத்தை வீட்டிற்கு வந்து வாங்கிச் சென்ற நண்பர், ஞாபகமாய் தான் தயாரிக்கும் நகுலன் புத்தகத்தைப் பற்றிச் சொல்லவில்லை. எங்கே நானும் கேட்டு ஒட்டிக்கொண்டு விடுவேனோ என்ற பயம் அவருக்கு இருந்திருக்கலாம். என் முயற்சியில் நானும் கொண்டு வந்துள்ளேன். பெரும்பாலும் எனக்கு நகுலனுடன் ஏற்பட்ட அனுபவமும், அவருடைய கவிதைகளையும், கட்டுரைகளையும் கொண்டு வந்துள்ளேன். எனக்குச் சமீபத்தில் சாகித்திய அக்காதெமிமூலம் நகுலன் கட்டுரைகளை முழுவதும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கிட்டத்தட்ட 20 பக்கங்களுக்குக் கட்டுரை எழுதியிருக்கிறேன். நகுலன் சிறப்பிதழைக் கொண்டு வந்ததால் எப்போதும் பாதுகாக்க வேண்டிய இதழ் இது. நவீன விருட்சம் 118-119வது இதழ் நகுலனின் சிறப்பிதழ்.. சந்தாதாரர்களுக்கு சிறப்பிதழ் அனுப்பப்படும். இப்போது சந்தா கட்டுபவர்களுக்கும் இந்த இதழ் உண்டு. கூகுள் பே மூலம் ரூ.150 ஆண்டுச் சந்தா அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். தொலைப்பேசி : 9444113205.