இனிக்கும் தமிழ் – 88/ டி வி ராதாகிருஷ்ணன்

அகங்காரம் ஒழிய வழி

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் துங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி ஆமே.

உங்களால் எதையும் சாதிக்கும் நிலையிலும் கோபத்தை விட்டு ஒழியுங்கள்.
எந்த அளவுக்கு மனத்தை நல்வழியில் செலுத்த முடியுமோ அந்த அளவுக்கு
மனத்தைச் செலுத்துங்கள். இரவும், பகலும் கருணையான நினைவுடன் யோகநிலையில்
இருந்து வந்தால், ஆணவமாகிய கல்லும் விலகி இறைவடிவான பரவெளி தென்படும்.

(விளக்கம்) கோபம் பிறரைக் கெடுப்பதோடு இன்றித் தன்னையும் கெடுத்தலின்
அதனை விடுதல் வேண்டும். மனம் பலவழியில் சிதறுண்டு போகும்; அதனை
நல்வழியில் நிறுத்துதல் இன்றியமையாதது. அருள் என்றும் மாரு திருத்தல்
வேண்டும் என்பார், அல்லும் பகலும் அருளுடன் துரங்கிளுல் என்றனர். ஆணவம்,
தடிப்பும் வன்மையும் பெற்றது. ஆதலின், அதனைக் கல் எனக் குறிப்பிட்டனர்