
நீ வருவதாய் சொன்ன அந்த அந்திக்காக காத்துக்கிடந்தேன்.
கண்கள் பூத்துக்கிடந்தது அந்த மேல்வானமும் தான்.
நம்பிக்கை நல்விளக்கை என்னுள் ஏற்றிவைத்தேன்
இருள் என்னவோ இதழ்சுழித்தோடிய்து.
வாசல் நோக்கினேன் உன் வரவுக்காய் விழிவிரித்தபடி
கண்ணகி வாசல் வந்த கோழியைப்போல் என் வெருமை வாசல் மறிக்க
மனம் அழைத்துமன்றாடினேன்.
போராட்டப்பெருநிலைதான்
உள்ளுக்குள்ளே.
தேரோட்ட வீதியிலோ நிலா
சீராட்டிப்போன நடுஇரவில் உன் காலடி ஓசை ஒரு காததூரத்தில்
காதோரம்விழுந்தது .
உன் ஸ்பரிசம் பட்டதுபோல் சுருண்டுவீழ்ந்திருந்தேன்.
பிறகு நீ வந்தாயா ?
என்னை அள்ளி எடுத்தாயா?
மயக்கம் தெளிந்தேனா?
மதுக்குளத்தில் விழுந்தேனா?
கறையென்றால் நிலா என்று சொன்னாலும் களங்கமில்லாதது.
பாவம் நிலா பார்த்த உண்மையை யாரிடமோ சொல்வதற்கு முன்
நீயாவது சொல்லிவிடேன் மீசைக்காரா?
