கைப் பறவை!ஆர்க்கே!

சிறு பிஞ்சுப் பஞ்சாய்
இருக்கையிலே
அதையெடுத்தென்
கரங்களுக்குள்
இதப்படுத்தினேன்.
சொட்டுச் சொட்டாய் குடிநீர்
மணி மணியாய் நெல்.
அவ்வப்போது ஊட்ட
கனிச்சிறு துணுக்கு.
பறவைக்கு என்
கரிசனம் பிடித்தது போல.
எனக்கு அதன் மீதான
பாசமும் வளர்ந்தபடியே
இருந்தது.
இடுப்பின் இடுக்குகளில்
சிறகுகள் சிலிர்த்து முளைக்க
ஒரு இனிய காலையில்
பறவையான பிஞ்சு
பயணமானது வானளக்க.
என் கரங்களை காலிசெய்து
விண்ணைப் பார்த்தேன்.
உயரே பறக்கும் சிறு பறவை
என்னைப் பார்த்து கண் சிமிட்டியது
போல இருந்தது.
வேறன்ன இனி வேண்டும்
இவ்வுலகில்–
எனக்கும் அந்தப் பறவைக்கும்?
இறைவா நன்றி!
———அன்புடன் ஆர்க்கே.!

One Comment on “கைப் பறவை!ஆர்க்கே!”

  1. கைப்பறவை ரசிக்கும்படி
    இருந்தது, குறிப்பாக என் போன்ற பறவைகளை நேசிப்பவர்களுக்கு.
    ஜான்னவி.

Comments are closed.