நழுவும் காட்சிகள்/ ஜான்னவி


   நழுவும் காட்சிகள்
 -------------------------

மூடுபனி திரைக்குப் பின்
அடர் பனி தரித்த
மலை உச்சிகள்
தங்களுக்குள் ரகசியங்களை ப்
பரிமாறிக் கொண்டிருக்க
கனவில் உலவுகின்றன
பல காட்சிகள்

புதையுண்ட நினைவுகளை மனதை அகழ்ந்து
மீட்க
என்ன மகிழ்ச்சி
எவ்வளவு சோகம்
மகிழ்ச்சி போர்த்து வந்த
துயரம்
இப்போதைய நிகழ்வுகளும் சிந்தனைகளும்
பழைய நினைவு களோடு
அம்மானை ஆட
கண்ணீரில் நனையும்  காட்சிகள்
மறுபடி தெளிவுடன் பார்க்க முயல
கனவு மறைந்து 
போயே போனது
இதயத்தின் ஒரு
துண்டை பறித்துக்கொண்
டு
இளமையைப் போல. 

         🦋🦋🦋
ஜான்னவி

ஜான்னவி