
வண்டலில் உயிர்த்த முத்து
நபிகள் நாயகத்தின் வரலாற்றை விளக்கும் சீறாப்புராணத்தின் தொடர்ச்சியாக அனு முகமது மரக்காயர் என்பவரால் எழுதப் பட்டது சின்ன சீறா என்னும் நூல். இதில் வரும் மெதீனா நகரை பற்றிய அழகான வருணனை.
நபிகள் நாயகத்தின் ஆட்சிக்குட்பட்ட மெதீனா நகரில் உள்ள வாவிகளில் முத்துகள் நிறைந்து கிடக்கின்றன். அவ்வாவிகளில் உறங்கும் அன்னப் பறவைகள் அம்முத்துக்களை தன் முட்டை என்று எண்ணி அடைகாத்துக் கொண்டு உறங்குகின்றன. அந்த இனிமையான பாடல் இது
”கருமுகை வெள்வாய்ப் பீலிக்
கம்புகால் ஊன்றி ஊர்ந்து
மருமலி கமல வாவி
வண்டலில் உயிர்த்த முத்தைப்
பொருவரும் பசிய சூட்டுப்
பொற்புறும் எகினம் அண்டத்
திரளென அணைத்து உறங்கும்
செறிவள மதீனா……….”
