செருப்பில்லாத கால்கள் /அழகியசிங்கர்

எங்கள் தெருவில்
செருப்பில்லாமல்
ஒருவள்
நடந்து போய்க்
கொண்டிருப்பாள்

ஒருநாள் கேட்டேன்
ஏன் செருப்பில்லாமல்
நடக்கிறாய் என்று
பதில் சொல்லாமல்
போய்விட்டாள்

இன்னொருநாள்
பார்த்தேன்
வேறு ஒரு பக்கம்
பார்த்தபடி
என்பக்கம் பார்க்காமல்
போய்க் கொண்டிருந்தாள்
ஆனால்
காலில் செருப்பில்லை

உலகத்துத் தூசியெல்லாம்
அவள்
காலில் வழிந்து
கொண்டிருக்கிறது
என்று
எனக்குத் தோன்றும்