அண்மையில்…/வாசுதேவன்

அண்மையில் கதக் கலைஞர் பிர்ஜூ மஹாராஜா இறந்தவுடன் சலசலப்பு வந்தது. அதை அப்போது சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. நண்பர் ராம் இதைப்பற்றி எழுதியவுடன் தேடிப்பிடித்து வாசித்தபோது ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் மறுபுறத்தில் அவர் மேல் இருந்த மரியாதையே போய்விட்டது. 5 வயது குழந்தை முதல் 50 வயது கிழவி வரைக்கும் அத்துமீறலாக பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார். சில சிறுமிகள் எழுதியதை வாசித்தபோது கோபம் தலைக்கேறியது. பல குழந்தைகள் கதக் நடனத்தை பாதியில் கற்று இதனால் ஓடிவிட்டார்கள். ஒரு குழந்தையை பாலியியல் பலாத்காரம் செய்து உள்ளாடை முழுவதும் ரத்தத்தால் தோய்ந்து போனதை நடுக்கத்துடன் எழுதியதை வாசிக்கும்போது இந்த மனுஷன் கலைஞன் இல்லை. கலையின் பெயரால் காம வேட்டை நடத்தியுள்ளார். இதற்கெல்லாம் உடந்தை அவருடைய பிரதான சிஷ்யை சஸ்வதி சென். இந்த பெண் குழந்தைகளை வசியம் செய்து பிர்ஜூ படுக்கையறைக்கு அனுப்பியவர். பலர் புனைப்பெயர்களில் எழுதியுள்ளார்கள். இறந்தபிறகுதான் வெளியுலகத்திற்கு மெல்ல தெரிய வருகிறது. ஏன் அவர் உயிரோடு இருக்கும்போது வெளியிட அஞ்சினார்கள் எனத் தெரியவில்லை? அழுத்தம்,மிரட்டல் இருந்ததா? கொடூர காமுகனாக இருந்துள்ளார். கதக் நடனத்திற்கு பெரும் இழுக்கு! வெட்கக்கேடு!(சுட்டியெல்லாம் கேட்டு என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். வாசிக்கிற விஷயங்கள் இல்லை).

2 Comments on “அண்மையில்…/வாசுதேவன்”

Comments are closed.