யோகி – இன்றொரு சேதி /விசிறி சங்கர்



O
யோகி வாழ்வில் ஏழு என்று எண்
முக்கியத்துவம் பெற்றுத் திகழும்
அழகிய தருணங்கள் எவையெவை..
O
ஏழு என்பது தெய்வீக எண். எண்ணியல் சாத்திரப்படி ஏழு கேதுவுக்குரியது. கேது ஞான காரகன். ஏழு என்னும் எண் ஞானத்தோடு தொடர்புடையது.
O
யோகி தம் குருநாதர் பப்பா இராமதாசரிடம் இராம நாம தீட்சை பெற்று, நாம ஜபத்தில் மூழ்கி தம்மை இழந்து ஞானம் பெற்றது ஏழு நாட்களில்.
O
ஞானம் பெற்ற யோகி, ஆனந்தாஸ்ரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போது,
எங்கு செல்கிறாய் என்று பப்பா இராமதாசர் கேட்க அருணாசலம்… திருவண்ணாமலை என்கிறார்….
அங்கேயே செல் என்று குருநாதர் ஆணையிட … ஞானம் பெற்ற யோகி பாரத தேசமெங்கும் அலைந்து திரிந்து திருவண்ணாமலையை அடைய எடுத்துக் கொண்ட ஆண்டுகள் ஏழு !
O
யோகியின் முதல் ஆலயமாம் காணிமடம் எழுவதற்கு முன், தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகளை ஆனந்தாஸ்ரமத்திற்கு அனுப்பி வைத்த ஆண்டு 1983 காணிமடம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஆனந்தாஸ்ரமம் பூஜ்யஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் வருகை தந்த ஆண்டு 1990. இவ்வாறு யோகியின் முதல் ஆலயம் எழ எடுத்துக் கொண்ட ஆண்டுகள் ஏழு.
O
திருவண்ணாமலையில் யோகி ஒரு மூட்டையைக் கட்டி தபஸ்வி பொன் காமராஜ் தலையில் வைத்து, அதை காணிமடம் எடுத்துச் செல்லுமாறும் அதை ஏழு நாட்கள் கழித்தே பிரித்துப் பார்க்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். ஏழு நாட்களுக்குப் பின் பிரித்து பார்த்த போது, அதில் கிடைத்த அமெரிக்க பக்தர் திரு லீ லோஸோவிக் புத்தகம் மூலம் பொன் காமராஜ் சுவாமிகளுக்கு, நாகர்கோவில் ஜயந்திக்கும் காணிமடத்திற்ககும் லீயை அழைக்கும் எண்ணம் பிறந்தது.
O
யோகியின் நேரடி மேற்பார்வையில் திருவண்ணாமலை ஆஸ்ரம கட்டுமானம் நடந்ததும்… ஏழு ஆண்டுகள்தாம்…
O
யோகியின் திவ்விய சரிதத்தை எடுத்துரைக்கும் சுரத சப்தாகம் நடைபெறும் நாட்கள் ஏழு !
ஆறு காண்டங்கள் முடித்து
உலகத் தந்தை யோகி ராம்சுரத்குமார் பட்டாபிஷேகம் நடைபெறும் நாள் ஏழாம் நாள் !
O
ஏழு – யோகி வாழ்வின் அதிசய எண் !
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா