மூவர்ணக் கொடி.!/வே.கல்யாணகுமார்


மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்..
முத்தமிழால் முன் நின்று போற்றுவோம்..
நால்வருண சதியதனை விரட்டுவோம்..
நமதுயிரே தேசியமே முழங்குவோம்.

பால் வருண பேதம் வகுத்த சாத்திரம்..
பகுத்தறிவால் சிந்தித்து மாற்றுவோம்..
மூவர்ண தேசியக்கொடி ஏற்றுவோம்..
முன்பணிந்து ஒற்றுமை நிலைநாட்டுவோம்..

மேல் வருணம் கீழ் வருணம் என்பதா.?
மெய் வர்ணம் கண்டு நம்மைப் பிரிப்பதா.?
மூவர்ணக் கொடியேற்று நாமெல்லாம்..
மூடத்தனம் அத்தனையும் விரட்டுவோம்..!

ஓர்வர்ணம் அறத்தின் மேன்மை சொல்லுது..
ஓர்வர்ணம் வெள்ளைமனதை சொல்லுது..
ஓர்வர்ணம் பசுமைத் தழைக்கச் சொல்லுது..
மூவர்ணம் கொடியின் வடிவில் பறக்குது.!

One Comment on “மூவர்ணக் கொடி.!/வே.கல்யாணகுமார்”

Comments are closed.