
எழுத்தாளர் ஐராவதம் இறந்து போய் ஒரு ஆண்டு முடியப் போகிறது. அவர் வீட்டில் நேற்று வருஷாப்தியம். வெளி ஊரிலிருந்து வந்த அவர் இளைய சகோதரர்தான் இதை நடத்தினார். அவரைப் பார்க்கும்போது ஐராவதம் அவர்களையே பார்ப்பதுபோல் இருந்தது. இந்தப் புத்தகக் காட்சியின் போது ஐராவதம் அவர்களின் üமாறுதல்ý என்ற தொகுப்பை கொண்டு வந்துள்ளேன். ஐராவதம் எழுத்து தீவிர எழுத்து வûகையயைச் சார்ந்த எழுத்தும் இல்லை, அதேபோல் ஜனரஞ்சக எழுத்தும் இல்லை. இரண்டும் கலந்த ஒருவித எழுத்து. மாறுதல் தொகுப்பில் பல கதைகள் படிக்க சுவாரசியமாக இருக்கும். இத் தொகுபபின் விலை ரூ.60தான்
