
அவள் ஓடிஓடிக்
கட்டுகிறாள்
ஓரில்லம்
காசு அவள் கையில்
வந்து வந்து மறைகிறது.
சமைத்துசமைத்து
பரிமாறுகிறாள்
உணவு
உணவை உண்டு
உருவம் மாறியவர்கள், எடை கூடியவர்கள்
மெத்தப் படித்து
மேல் நாடு
சென்றவர்கள்
சென்று திரும்பியதும்
சொல்கிறார்கள்
நீ இங்கிருக்க வேண்டாம்
காசில்லை உன்னிடம் ,விற்று காசாக்கலாம்
இவ்வில்லத்தை
என்று தளும்பும்
அவள் கண்களைப் பார்க்காமலே.
காசுகளை வைத்துக் கொண்டு
தங்களுக்குள்
பந்தாடி மகிழ்கிறார்கள்.
காசில்லை உன்னிடம் என்று
ஈட்டி எறிகிறார்கள்
இவள் நெஞ்சில்.
தங்கள் உணவும்
உடையும் உறைவிடமும்
மேல் படிப்பும் வேலையுமாகி
இப்போது தங்கள் கைகளில்
நிரம்பி வழிவது
தாயின் கைக்காசு
என்பதை
காலக்காற்று அடித்துச் சென்று
மறைத்து விடுகிறது.
🦋🦋🦋
