கதவைத் திறந்தால்
எதிர்வீட்டுப் பூக்கள்
கண்களை ஈர்க்கின்றன;
எழிலாகச் சிரிக்கின்றன!
பக்கத்து வீட்டுப் பூக்களும்
சுற்றுச் சுவர் தாண்டி
எங்கள் வீட்டுத் தரையில்
இரைந்து கிடக்கின்றன;
மலர்ச்சியை இறைக்கின்றன!
அக்கம் பக்க
மழலைப் பூக்கள் கூட
காணும் போதெல்லாம்
கையசைக்கின்றனர்;
இதழ் விரித்து நகை சொரிகின்றனர்!
பராமரிப்பவர்கள் மட்டும் ஏன்
பாராமுகமாய்த்
திரிகின்றார்கள்?
