
கண் எரிபடு பழம் :
கல் லெறிபடு மரம்:
நான்…
வாய் புளித்தால்
சொல் கசக்கிறது;
புளிப்போ, இனிப்போ,
கல்லெறி படுமரம்
நான்.
ஏன் ?…
முன்னோர் உதிரம்
புளித்ததும் இனித்ததும்
நான் காரணமா?
மண்ணா ? எருவா?
தோட்டக்காரன் –
கைவழி வந்த
கவலையா ? சிரிப்பா?
கால பேதமா?
………
கர்ம பலன் என்றாயே ?
யாருடைய கர்மம்?
எவருக்குப் பலன் ?
……….
கல்லெறி படுபவன்
நான்!
ஏன்?
வேஷம்/தி சோ வேணுகோபாலன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
