ஜே.எஸ். ராகவன்

ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தின் எதிர் வீட்டில் வசித்து வந்த எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜு மின்சார வண்டி பிடித்து கிண்டி வரை பயணித்து பிறகு மைலாப்பூரில் இருக்கும் அலுவலகம் போய்ச் சேருவார். எழும்பூர் போக நான் கிண்டிக்கு வரும்போது, ராஜுவைப் பார்ப்பது வழக்கம்.
‘சாவி’யின் ஆசிரியர் குழுவில் இருந்த ராஜூ நகைச்சுவைக் கதை ஒன்றைக் கொடுங்களேன் என்று கேட்டார். ஊதுவத்தி வியாபாரி போல தயாராக கைவசம் இருந்த உறையை பெட்டியிலி ருந்து எடுத்துக் கொடுத்தேன். என்னை தீர்க்க மாக பார்த்துவிட்டு வரேன் என்று படிகளில் ஏறி கும்பலில் கரைந்தார்
மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைப் பார்த்த போது, ‘எடிட்டர் சார் வேண்டாம்னு படிக் காம லேயே சொல்லி விட்டரார். காரணம், சாவி யில் நாடகம் போடுவதிலலையாம்.’ அவர் முகத் தில் ஏமாற்றம் கப்பி இருந்தது.
நான்கு வாரம் கழித்து மின் வண்டியிலிருந்து இறங்கியவர் ‘கங்கிராட்ஸ், சார். உங்கள் ‘அவரோட ராவுகள்’ நாடகத்தை இன்னிக்கு ஆனந்த விகடனில் பார்த்தேன். இப்போ தெரிய றதா, சாவியை விட விகடன் ஏன் அதிகமா விக் கிறதுன்னு’ சொல்லி விட்டு அலுவலகம் விரைந் தார். பின்னால் சாவியில் என்னுடைய கதைகள் வந்தது வேறு விஷயம்.
அன்று குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது அந்த நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்பு, ‘லிவ்’ என்றார். ஒரு கணம் தயங்கினேன். ‘ராஜு தப்பா எடுத்துக்க மாட்டீங் களே?’
‘மாட்டேன்’ .
ஆங்கில வார்த்தை LIVE என்பதை அந்த இடத்தில் ‘லைவ்’ என்று உச்சரிக்கணும் என் றேன். கண்களாலே நன்றி சொன்னார்.
அந்த உன்னதமான நண்பர் மௌன்ட் ரோடு பசும்பொன் தேவர் சிலை அருகில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்தபோது விபத்தில் சிக்கி இறந்தார் என்பதைக் கேட்டு ஆடிப் போனேன்,
‘லை’ வாக பற்பல வருஷங்கள் ஏன் ராஜு இருக்க வில்லை?
—oOo—
