பட்ஜெட்/பாலசாண்டில்யன்

வருமானத்தில்
மாற்றம் உண்டு
வருமான வரியில்
மாற்றம் இல்லை…

வைரக்கல்லில்
அரிசியோட ருசியில்லை
ஆனால் வரி குறைப்பு… ?!
வயறுக்கு ஏதுமில்லை..

கரன்சி கூட
டிஜிட்டல் ஆகும்
ஆன்லைன் கல்வி போல…

நோயாளிகளுக்கு
ஆக்ஸிஜன் உண்டு
சிறுகுறு தொழில்களுக்கு இல்லை…

முதியோருக்கு பூஸ்டர்
தவிர வேறில்லை

நிதிகளைப் பிரித்து
நதிகளை இணைக்கும் உத்’தேசம்’…

அயல்நாட்டு முதலீடு வரும்
உள்நாட்டு வணிகம் இருக்குமா?!

எல்கேஜி யுகேஜிக்கு விடுமுறை
5ஜி விரைவில்…

அறுபது லட்சம் பேருக்கு வேலை
எங்கே எப்படி எப்போது?!
மற்ற பிள்ளைகள்
திருமணம் செய்து கொண்டு
செட்டில் ஆகலாம்?!

சாயம் போகாமல்
விவசாயம் காக்க வழி வருமா?!

பட்ஜெட் உரை நிறைவு
மக்கள் மனம் அல்ல…