
சிறுவயதில் நான் அண்ணாந்து பார்த்த விஷயம் ‘சர்க்கஸ்”…இப்போதும் அந்த பிரமிப்பு நீங்கவில்லை…ப்ளு க்ராஸ் (Blue Cross) நிராகரிப்பார்கள்..ஆனால் சர்க்கஸின் குட்டி சந்தோஷத்திற்கு ஈடுயிணையில்லை..ருஷ்யா சர்க்கஸ் வேறு வகை..பெங்கால் சர்க்கஸ் / கேரளா தளச்சேரி சர்க்ஸ்கள்தான் இந்தியாவில் ஜம்போ, ஜெமினி, பம்பாய் சர்க்கஸ் என பல பெயர்களில் அறிமுகமானது…இன்றளவிலும் என்னை வசீகரிப்பது சர்க்கஸ் கலை…ஆனால் இவர்கள் மறைந்து வருகிறார்கள்..சில வருடங்களுக்கு முன் தளச்சேரிக்கு சென்றபோது சில கலைஞர்களை பார்த்து மனம் வெதும்பினேன்..டிஜிட்டல் யுகத்தில் சர்க்கஸ் ஐ மறந்துவிட்டோம்… அவர்கள் வெறும் விதூஷகர்கள் இல்லை..நமக்காக அரிதாரம் பூசி உயிரை பணயம் வைத்தவர்கள்…இவர்களை எந்தளவுக்கு காட்சி / எழுத்தில் சித்திரத்துள்ளார்கள் என தேடினேன்.. (1) ஃபெலினியின் பல படங்களில் சர்க்கஸ் தாக்கத்தை உணரமுடியும். (உ.ம். La Strada ) (2) ராஜ் கபூரின் ‘மேரே நாம் ஜோக்கர்’ இந்த இரண்டு படங்களும் சர்க்கஸ் கலைஞர்களை வேறு கோணத்தில் கருணையோடு பார்க்க வைக்கும். (3) ஜேம்ஸ் பாண்டின் ” ஆக்டோபஸி’ மகா வக்கிரம்…கமல ஹாசனின் தமிழ் படத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. சாதாரணம். . அசோக மித்திரனின் ”புலிக்கலைஞன்” சிறுகதையை மீண்டும் வாசித்து மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்..

Very True 👌